ஆறு இடங்களில் நடக்கும் புலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள்

Bookmark and Share

ஆறு இடங்களில் நடக்கும் புலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள்

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப்  நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் வளர்ந்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வெளியீட்டு தேதி நெருங்கி வரவர புலி படத்தைப் பற்றிய பரபரப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் புலி படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வெளியிடப்படவிருக்கின்றன.

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள புலி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கான  ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

அதோடு இவர்களுடன் சல்மான்கான், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, கமல் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி புலி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் பாக்கி இருப்பதால் புலி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தகவல் அடிபடுகிறது. இயக்குநர் சிம்புதேவனிடம் கேட்டால், புலி படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் உக்ரைன், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ரஷ்யா, இத்தாலி என  மொத்தம் ஆறு இடங்களில் பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.

மகதீரா, நான் ஈ படங்களில் பணிபுரிந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான கமலக்கண்ணன் தலைமையில்  மிகப்பெரிய டீம் ஒன்று புலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions