தயாரிப்பாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத புன்னகை பூ கீதா!

Bookmark and Share

தயாரிப்பாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத புன்னகை பூ கீதா!

அறிந்தும் அறியாமலும்,குண்டக்க மண்டக்க, பட்டியல், நர்த்தகி, ஒரு நடிகையின் வாக்குமூலம் என பல படங்களை எஸ்.ஜி.பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் புன்னகை பூ கீதா.

மலேசிய தமிழரான இவர், மைந்தன் என்ற மலேசிய தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தவர். மேலும், தான் தயாரித்த சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் முகம் காட்டி வந்த கீதா, தற்போது விமல் நடிப்பில் காவல் என்ற படத்தை தயாரித்திருப்பதோடு தானே நாயகியாகவும் நடித்திருக்கிறார்.

ஆனால், இதுவரை தன்னை தயாரிப்பாளராக வெளிப்படுத்தி வந்த புன்னகை பூ கீதா, இந்த காவல் படத்தில் தானே கதாநாயகியாகவும் நடிப்பதால் தயாரிப்பாளராக தனது பெயரை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

அதோடு, அந்த படத்தில் சம்பந்தப்பட்ட டெக்னீசியன்களிடமும், என்னை கதாநாயகியாக மட்டுமே குறிப்பிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

இந்நிலையில், காவல் படத்தில் கீதா சிறப்பாக நடித்திருப்பதாக கூறிவரும் அப்படக்குழுவினர், அடுத்தடுத்து மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்கள். 

 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions