புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியீடு: படக்குழுவினர் அதிர்ச்சி

Bookmark and Share

புறம்போக்கு பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியீடு: படக்குழுவினர் அதிர்ச்சி

‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனம், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. வாசன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை யாரோ ஒருவர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புறம்போக்கு’ படத்தை சிறைச்சாலையை பிரதானமாக வைத்து எடுத்து வருகிறார் எஸ்.பி.ஜனநாதன். இப்படத்திற்காக பிரம்மாண்ட சிறைச்சாலை செட் அமைத்து அதில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஷாம் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?
ஷாமின் 25வது படம் \'புறம்போக்கு\'
புறம்போக்கு எந்தமாதிரியான கதை!
புறம்போக்கு படத்தில் தூக்குதண்டனை கைதியாக ஆர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions