தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து

Bookmark and Share

தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆர்யா, விஜய்சேதுபதியுடன் ஷாமும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சட்டப்படி நடக்கும் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி மற்றும் ஜெயில் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் ஷாம். புறம்போக்கு படம் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

அதில் மெக்காலே என்று போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம் தூக்கு தண்டனை வேண்டும் என்கிற கருத்துடையவர். ஆர்யாவை தூக்கில் போடுவதற்காகவே நியமிக்கப்பட்ட அதிகாரி அவர். கடைசியில் தூக்கிலும் போட்டுவிடுவார்.

படத்தில் தூக்கு தண்டனை  வேண்டும் என்ற கருத்துடையவராக நடித்த ஷாம் நிஜத்திலும் தூக்கு தண்டனை வேண்டும் என்ற கருத்துடையவராக இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக புறம்போக்கு டீம் தமிழ்நாடு முழுவதும் சுற்றி ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகிறது. முக்கிய ஊர்களில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் "தூக்கு தண்டனை மனித குலத்துக்கு விரோதமானது. காட்டுமிரான்டித்தனமானது.

ஒரு உயிரை எடுக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் இல்லை" என்று கருத்து சொல்லி வருகிறார். அருகில் இருக்கும் ஷாம் "தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே தீரவேண்டும்.

தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தான் குற்றத்தை குறைக்கும், குற்றவாளிகளுக்கு பயத்தை கொடுக்கும். தூக்கு தண்டனை வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று கூறிவருகிறார்.

"இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எப்போதும் மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர். புறம்போக்கு படத்தில் நடித்தவர்கள் அனைவருமே படத்தின் கருத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் ஜனாவின் உதவியாளர்.


Post your comment





Related News
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?
டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
\'மாஸு என்கிற மாசிலாமணி\' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி
மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions