மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்

Bookmark and Share

மே 15ல் புறம்போக்கு ரிலீஸ்

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தற்போது இயக்கி உள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வர்ஷன் இசை அமைத்துள்ளார்.

யுடிவிக்காக ஜனநாதன் தனது பைனரி பிக்சர்ஸ் மூலம் பர்ட்ஸ் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். 50 கோடி ரூபாய் முதலீட்டில் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சராசரி குடிகமன் விஜய்சேதுபதி, சராசரி மக்களுக்காக வாழும் போராளி ஆர்யா, இவர்களை ஒடுக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி ஷாம், மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கணை கார்த்திகாக இவர்கள் நான்கு பேருக்கும் இடையிலான முட்டல், மோதல், இணைதல் தான் கதை. படத்தின் பெரும்பகுதி சிறைச்சாலையில் நடக்கிறது.

இதற்காக இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை சுற்றிப் பார்த்து அதே போன்று பின்னி மில்லில் செட் போட்டு அங்கு படமாக்கப்பட்டது. குழுமணாலி, ராஜஸ்தான் பாலைவனம் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு 3 கட்டமாக நடந்தது.

தற்போது படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று படத்தை வெளியிட ஜனநாதன் விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அன்றைக்கு கமலஹாசனின் உத்தம வில்லன் ரிலீசாவதால் மே 15 அன்று புறம்போக்கு ரிலீசாவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions