ஒரு ஆண்டாக நடந்து வந்த புறம்போக்கு படப்பிடிப்பு நிறைவடைந்தது

Bookmark and Share

ஒரு ஆண்டாக நடந்து வந்த புறம்போக்கு படப்பிடிப்பு நிறைவடைந்தது

பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். யூடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எஸ்.பி.ஜனநாதன் தனது நிறுவனம் சார்பில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார்.

முதலில்  இந்தப் படத்தில் ஜீவாவும், ஜெயம்ரவியும் நடிப்பதாக இருந்தது. அவர்கள் கால்ஷீட் கிடைப்பதில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு பதிலாக ஆர்யாவும், விஜய்சேதுபதியும் நடித்தார்கள். முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்த கேரக்டரில் கார்த்திகா நடித்தார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் குளுமணாலியில் நடந்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இறுதிகட்ட படப்பிடிப்புகள் பின்னி மில்லில் பிரமாண்ட ஜெயில் செட் போடப்பட்டு அங்கு நடைபெற்றது. சுமார் 4 கோடி செலவில் போடப்பட்ட ஜெயில் செட்டில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது.

படத்திற்கு வர்ஷன் பின்னணி இசை கோர்த்து வருகிறார். கலர் கரெக்ஷன், டப்பிங், டி.ஐ பணிகள் வெவ்வேறு இடங்களில் வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள். ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் படம் வெளிவருகிறது.

 


Post your comment





Related News
புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காட்பாடி ரெயில் நிலையத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புறம்போக்கு பட ஷூட்டிங்
ஆர்யா-விஜய் சேதுபதியின் \'புறம்போக்கு\' – பொங்கலன்று \'பட்டா\' போடுகிறார்கள்!
புறம்போக்கு கதையை டீசராக உருவாக்கும் எஸ்.பி.ஜனநாதன்
டேப் டான்ஸில் களமிறங்கும் கார்த்திகா..!
புறம்போக்கிற்காக சண்டை பயிற்சியில் கார்த்திகா..!
\'ஆர்யா\' \'விஜய்சேதுபதி\'யுடன் கைகோர்க்கும் ஷாம்..!
‘புறம்போக்கு’ தலைப்புக்கு சொந்தம் கொண்டாடும் யுடிவி பிக்சர்ஸ்..!
புறம்போக்கு தலைப்பை விட்டுக்கொடுக்கரெடி இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.
ஆர்யா - விஜய் சேதுபதியின் \'புறம் போக்கு\' படத்துக்கு எதிர்ப்பு.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions