மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்

Bookmark and Share

மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. அவருடைய 150வது படத்தை பற்றிய செய்திகள் வெளியாகும் ஆனால் அந்த செய்தி அதிகாரபூர்வமானதா அல்லது வதந்தியா என்று அவரது ரசிகர்கள் குழம்புவது வழக்கமாகும்.

இந்நிலையில் தற்போது சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

இது சம்பந்தமாக முறையான அறிவிப்பு மெகா ஸ்டாரின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ல் வெளியாகும். இந்த படத்தை மெகா ஸ்டாரின் மகனும் பிரபல ஹீரோவுமான ராம் சரண் தயாரிக்கிறார். மெகா ஸ்டார் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற படத்தில் நடித்ததற்கு பிறகு அரசியலில் தீவிரமானார்.

அந்த படம் அவருக்கு 149ம் படமாகும். இந்நிலையில் அவர் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். இந்த படத்தை வரும் 2016ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் தகவல்கள் அனைத்தும் அவருடைய  பிறந்தநாளில் வெளியாகும்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions