நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?

Bookmark and Share

நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?

டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகை சார்மி நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அப்படத்திற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்படம் ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கும் என்பதால் நடிகர் நிதின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க பூரி ஜெகன்நாத் திட்டமிடிருப்பதாக கூறப்பட்டது.

மேலும் ஜூன் 15 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் நிதின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக டோலிவுடிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நிதின் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

நிதின் தனது டுவிட்டர் பக்கத்தில் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக இருந்த தனது படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டதாகவும் எதிர்காலத்தில் மீண்டும் நாங்கள் இணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நிதின் தற்போது இயக்குநர் விநாயக் இயக்கத்தில் அகில் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகின்றார்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions