பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!

Bookmark and Share

பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!

டோலிவுட்டின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகநாத்தின் வீட்டில் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று ஜூப்ளி ஹில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார் பூரி ஜெகநாத்.

இவரின் வீடு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன் தினம் பூரி ஜெகநாத்தின் மகன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்கு அனைவரும் குடும்பமாக சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

வீட்டில் உள்ள பணியாளர்கள் மீதுதான் சந்தேகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் நகை வைக்கப்பட்டிருக்கும் ரகசிய இடங்கள் வெளியாட்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையாம்.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் பூரி ஜெகநாத்தின் மகள் பள்ளி விழா ஒன்றிற்கு அணிந்து செல்வதற்காக பீரோவிலிருந்து நகைகளை எடுத்தபோது, அங்கே சில வேலைக்காரர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. அதனால் அந்த கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions