முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..!

Bookmark and Share

முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..!

ஒருவழியாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்து இயக்கிய 'டெம்பர்' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு டென்சனில் இருந்து விடுபட்டிருக்கிறார் பூரி.. படம் ஹிட்டா, ஓப்பனிங்கில் எவ்வளவு கல்லா கட்டியது என்பதையெல்லாம் தயாரிப்பாளரும் ஜுனியர் என்.டி.ஆரும் பார்த்துக்கொள்வார்கள்.

அடுத்து தெலுங்கில் அவர் யாரை வைத்து இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, கன்னட சினிமா பக்கம் அவரது கவனம் திரும்பியிருக்கிறது. கன்னட சினிமா அவருக்கு ஒன்றும் புதிது இல்லை.

மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார், தனது மகன் புனீத் ராஜ்குமாரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த நினைத்தபோது, கன்னட திரையுலகில் இயக்குனர்களை தேடவில்லை.

தெலுங்கில் பிரகாசித்துக்கொண்டிருந்த பூரி ஜெகநாத்தை அழைத்து தனது மகனை ஒப்படைத்தார். அப்படி உருவான படம் தான் மாஸ் ஹிட்டான 'அப்பு'.இந்தப்படம் பின்னாளில் தமிழில் சிம்பு நடிக்க 'தம்' ஆக ரீமேக்கானது எல்லாம் பழைய கதை.

இப்போது கன்னடத்தில் மீண்டும் பூரிக்கு அழைப்பு வந்திருப்பது முன்னாள் பிரதமரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தேவகௌடாவின் பேரனான நிகில் கௌடா நடிக்கும் படத்தை இயக்கத்தான்.

நிகில் ஏற்கனவே 'விதான ஸௌதா' படத்தில் அறிமுகமாயிருந்தாலும் பூரி ஜெகனாத்தின் மோதிரக்கையால் குட்டுப்பட்டால், புனீத் ராஜ்குமார் போல சிகரம் தொடுவார் என நினைக்கிறது நிகிலின் குடும்பம். பூரியை இம்ப்ரெஸ் செய்வதற்காக தனது உடம்பை பிட்னெஸ்ஸாக மாற்றி வருகிறாராம் நிகில்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions