அஜித்தை இயக்க ஆசைப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்

Bookmark and Share

அஜித்தை இயக்க ஆசைப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்

தொடர் தோல்வியால் கொஞ்சம் துவண்டு போயிருந்த ஆக்ஷன் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கிய டெம்பர் படத்தின் மெகா ஹிட்டின் மூலம் மீண்டும் உற்சாகத்திலிருக்கிறார்.

டெம்பர் படத்திற்கு பிறகு பூரி ஜெகன்நாத் 2 படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் அதில் முதல் படமாக நடிகை சார்மியை வைத்து ஒரு படத்தையும், இரண்டாவதாக வருண் தேஜை வைத்தும் இயக்கப்போகிறார் என்று நாம் செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதுமட்டுமில்லாமல் பூரி ஜெகன்நாத்துக்கு தமிழ் படம் இயக்கவும் ஆசை இருக்கிறதாம், அப்படி தமிழ் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்துதான் படத்தை இயக்குவேன் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் சொல்லிக் கொள்கிறாராம்.

ஏற்கனவே டோலிவுட் இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் இணைந்தார், அதுபோல பூரி ஜெகன்நாத்துக்கும் வாய்ப்பு கொடுத்தால் அது அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்ஷன் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இதுகுறித்து ஏற்கனவே அஜித்திடம் ஜெகன்நாத் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த கூட்டணி இணையுமா என்று?


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions