பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்

Bookmark and Share

பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்

டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஜோதிலக்ஷ்மி படத்தை தொடர்ந்து இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் வருண் தேஜா நாயகனாக நடிக்கின்றார்.

அவருக்கு ஜோடியாக நடிகை திஷா நடிக்கவுள்ளார். இவர்களுடன் நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு லோபர் (Loafer) என பெயரிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் கல்யாண் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜூலை 10 ஆம் தேதி ராஜஸ்தான் செல்லவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை,ஆகஸ்ட்,செப்படம்பர் ஆகிய மூன்று மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஜய தசமி அன்று படத்தை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கல்யாண் கூறுகையில், அதிரடி சண்டை காட்சிகளுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் அமையும் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions