புரி ஜெகன்நாத்தை கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஆவேசம்

Bookmark and Share

புரி ஜெகன்நாத்தை கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஆவேசம்

டோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை இயக்கி வருபவர் புரி ஜெகன்நாத். பொது இடத்தில் வைத்து அவர் கன்னத்தில் அறைவேன் என பாடகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்‘, ரவி தேஜா, இலியானா நடித்த தேவுடு சேசின மனுஷிலு மற்றும் மகேஷ்பாபு, நாகர்ஜூனா உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் நடித்த படங்களை இயக்கியவர் புரி ஜெகன்நாத்.

இவரைப்பற்றி பிரபல தெலுங்கு பட பாடகர் தேஷ்பதி ஸ்ரீனிவாஸ் கூறியது:

புரி ஜெகன்நாத் தனது படங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நியாய தர்மம் சொல்லும் படங்களை எடுக்காததோடு சமுதாய பொறுப்போடுகூடிய படங்களையும் எடுப்பதில்லை.

மேலும் பல்வேறு இயக்குனர்கள் தவறான கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே படங்கள் இயக்கி வருகிறார்கள். அதன் மூலம் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதிக்கக்கூடாது என்ற உணர்வை மாணவர்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

அப்படிபட்டவர்களும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொது இடத்தில் வைத்து அவர்களின் கன்னத்தில் அறைவேன்.இவ்வாறு பாடகர் தேஷ்பதி ஸ்ரீனிவாஸ் கூறினார்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions