பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..?

Bookmark and Share

பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150வது படமான ஆட்டோ ஜானியை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க இருக்கும் மெகா ஸ்டார் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் கதையில் சிறிய மாற்றங்களை செய்ய சொல்லி இருந்தார் என்றும் அதனை அவர் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது அந்த கதை மற்றொரு படத்தின் கதை போல இருப்பதாக மெகா ஸ்டார் கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே ஆட்டோ ஜானி இன்னொரு சூப்பர் ஸ்டார்  ரஜினி  காந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிக்காவியமான பாட்ஷாவா என்ற வதந்தி கிளம்பியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும், பிரபல ஹீரோ நிதினும் ஒரு புதிய படத்திற்காக இணைகிறார்கள் என்ற செய்தி வெளிவந்தது. அதாவது அவர் ஆட்டோ ஜானியை வரும் ஆகஸ்ட் மாதத்தில் தான் தொடங்குவர் என்பதால் அதற்குள் நிதின் படத்தை முடித்து விடலாம் என்று நினைப்பதாக தெரிகிறது.

ஏனெனில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளில் தான் ஆட்டோ ஜானி படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை சுமூகமாக முடிப்பதற்காக பூரி ஜெகன்நாத் மெகா ஸ்டாரை விரைவில் சந்திக்க இருக்கிறாராம்.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிகர் ஓம் பூரியை மோடி கொன்றுவிட்டார்: பாகிஸ்தான் டிவி சேனல்
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
புரியாத புதிர் தெலுங்கு உரிமம் விற்பனையானது!
ராணுவ வீரர்களை அவமதித்ததாக நடிகர் ஓம் புரி மீது போலீசில் புகார்
பாகிஸ்தான் நடிகர்கள் முறையான விசாவுடன் தான் வருகிறார்கள்: இந்தி நடிகர் ஓம் புரி
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions