தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்!

Bookmark and Share

தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்!

மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பரதநாட்டியம் கற்றவர். இவர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து தமிழ், இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்தில் வந்தார்.

இந்த நிலையில் புவிஷாவுக்கு கன்னடத்தில் தயாரான ‘ஜில் ஜில்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தை மது இயக்கினார். வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார்.

உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புவிஷா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

‘‘ஜில் ஜில் படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் உதய் பல்லாலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்தார்கள். தயாரிப்பாளர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்.

இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் எனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்.’’

இவ்வாறு புவிஷா கூறினார்.

புவிஷா போலீசில் புகார் அளித்ததும் இருவரும் கைது செய்யப்படலாம் என்று கன்னட பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions