சுருதிஹாசனுடன் பட அதிபர் சமரசம்: வழக்கை வாபஸ் பெற முடிவு

Bookmark and Share

சுருதிஹாசனுடன் பட அதிபர் சமரசம்: வழக்கை வாபஸ் பெற முடிவு

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் பி.வி.பி. சினிமா படநிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலகிவிட்டார்.

இதையடுத்து சுருதிஹாசன் மீது பட நிறுவனம் ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுருதி விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்றும் மனுவில் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதுப்படங்களில் சுருதிஹாசன் நடிக்க தடை விதித்தார். இதையடுத்து தடையை நீக்க கோரி சுருதி ஐதராபாத் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஒப்பந்தத்தை மீறி படக்குழுவினர் செயல்பட்டனர் என்றும், கால்சீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தும் ஏப் 1–ந் தேதி படப்பிடிப்புக்கு மார்ச் 17–ந் தேதிதான் தகவல் தெரிவித்தனர் என்றும் கூறி இருந்தார்.

புதிய படத்தில் பிசியாக நடித்ததால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்றும், வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை 20–ந் தேதி (இன்று) நடைபெறும் என்று நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் பி.வி.பி. தயாரிப்பு நிறுவனம் மீது நடிகர் சங்கத்தில் சுருதிஹாசன் புகார் செய்தார். இதுபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் சுருதிஹாசன் மீது பட நிறுவனம் புகார் அளித்தது.

இந்த பிரச்சினையில் சமரச தீர்ப்பு காண நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், விஜயகுமார், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைப்புலி தாணு, பி.எல்.தேனப்பன், டி.சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

பி.வி.பி. சினிமா சார்பில் ராஜீவ் காம்னேனி கலந்து கொண்டார். மும்பையில் இருந்த சுருதிஹாசனிடம், சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் போனில் பேசினர். இருவரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். சுருதிஹாசன் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்பி கொடுத்து விட வேண்டும் என்றும், படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து இப்பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஒப்பந்தத்தில் வருகிற 21–ந் தேதி கையெழுத்திடவும் இரு தரப்பினரும் சம்மதித்தனர். பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கும், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவுக்கும் நன்றி தெரிவித்தனர். 


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions