தமிழ் சினிமாவுக்கு குட்பை சொன்ன பிவிபி தயாரிப்பு நிறுவனம்?

Bookmark and Share

தமிழ் சினிமாவுக்கு குட்பை சொன்ன பிவிபி தயாரிப்பு நிறுவனம்?

‘நான் ஈ’, ‘விஸ்வரூபம்’, ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய நிறுவனம் PVP சினிமா. அண்மையில், இந்த நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள், ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல் என்றும், இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் PVP நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. “வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது.

தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.

ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் .

அதுமட்டுமின்றி, PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது ” என்று சொல்கிறது PVP சினிமாவின் பத்திரிக்கை குறிப்பு.

 


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions