அதிக கட்டணம் வசூலிப்பதில்லை: தயாரிப்பாளர் சங்கத்திற்கு க்யூப் நிறுவனம் மறுப்பு

Bookmark and Share

அதிக கட்டணம் வசூலிப்பதில்லை: தயாரிப்பாளர் சங்கத்திற்கு க்யூப் நிறுவனம் மறுப்பு

கடந்த 8ந் தேதி நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசிய தயாரிப்பாளர்கள் சிலர், கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதாவும், சென்சார் சொன்ன திருத்தங்களை செய்ய லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனை கியூப் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து கியூப் சேவை செய்து வரும் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர் செந்தில்குமார், மண்டல தலைவர் ஜானகி ஆகியோர் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனம் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக படங்களை கியூப்பில் வெளியிட்டு வருகிறோம்.

ஒரு காட்சிக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டுதான் கட்டணம் வசூலிக்கிறோம். ஒரு வாரத்துக்கு அதிக பட்சம் 3500 ரூபாய்தான் கட்டணமாக வரும். எவ்வளவு நாள் ஓடினாலும் 20 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வராது.

மாஸ்டரிங் தொழில்நுட்ப வேகைளுக்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. சென்சார் திருத்தங்களை இரண்டு முறை இலவசமாவே செய்து கொடுக்கிறோம். மூன்றாவது நான்காவது முறைக்கே 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம்.

எந்த படமும் அந்த நிலைவரை செல்வதில்லை. இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions