வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹிந்தி படம் குயின். இதன் தமிழ் ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் நயன்தாராவோ இதை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். கால்ஷீட் காரணமாக அவர் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வந்த நிலையில் இறுதியாக நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இவரது தயாரிப்பில் ரேவதி இப்படத்தை இயக்குவார் என்றும் மேலும் சுஹாசினி மணிரத்னம் இப்படத்துக்கு திரைக்கதை எழுதுவார் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions