மகள்களின் வெற்றிக்காக காத்திருக்கும் ராதா!

Bookmark and Share

மகள்களின் வெற்றிக்காக காத்திருக்கும் ராதா!

`அலைகள் ஓய்வதில்லை' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகமாகி தென்னக திரை உலகை கலக்கியவர் ராதா. 1980 காலகட்டத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உள்பட அனைத்து முன்னணி நடிகர் களுடனும் நடித்தார். முதல் மரியாதை படத்தில் சிவாஜியுடன் நடித்து முத்திரை பதித்தார். அவருக்குப் பின் அவருடைய 2 மகள்களையும் திரை உலகில் அறிமுகம் செய்தார். 

மூத்த மகள் கார்த்திகா `கோ' படத்தின் மூலம் நாயகி ஆனார். அந்த படம் பேசப்பட்டது. அதன்பிறகு `அன்னக்கொடி', `புறம்போக்கு என்கிற பொது உடமை' படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

பின் `வாடீல்' படத்தில் நடித்தார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது கார்த்திகாவிடம் படங்கள் ஏதுமில்லை.

ராதாவின் 2-வது மகள் துளசி மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். ஆனால் அது எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அடுத்து நடித்த `யான்' படமும் தோல்வியடைந்தது. இன்னும் அவருக்கும் படங்கள் அமைய வில்லை.

`ஓகோ' என்று கொடிகட்டி பறந்த ராதா தன்னுடைய மகள்களுக்கு திரைஉலகில் நிலையான இடத்தை அடைத்துக் கொடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளார்.

என்றாலும், 2 மகள்களுக்கும் அடுத்து அமையும் படங்களாவது பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ராதா அக்கறையுடன் இருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இனியாவது 2 மகள்களும் வெற்றி பெறுவார்களா என்று ராதா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions