எங்கே ராதாவின் மகள்கள்?

Bookmark and Share

எங்கே ராதாவின் மகள்கள்?

அலைகள் ஓய்வதில்லை படத்தில் நாயகியாக அறிமுகி 80-களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையானவர் ராதா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தவர். 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள ரசிகர்களையும் கவர்ந்தார். முதல் மரியாதை படத்தில் சிவாஜிகணேசனுக்கு இணையாக அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் சொந்தக் குரலில் அவர் பேசியிருந்தால் கண்டிப்பாக தேசிய விருதை வாங்கியிருப்பார் என பேசப்பட்டது.

முன்னணி ஹீரோயினாக இருந்த ராதா அவருடைய இரண்டு மகள்களையும் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் கார்த்திகா கோ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் கார்த்திகா நடித்த அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை இரண்டு படங்களுமே தோல்வியைடந்தது. அவர் நாயகியாக நடித்துள்ள வா டீல் இன்னும் வெளிவரவில்லை.

இளைய மகள் துளசியை மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் படுதோல்வியடைந்தது.. அடுத்து துளசி நடித்த யான் படமும் படுதோல்வி. பின் துளசி வேறு எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. 

முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ராதா தனது இரண்டு மகள்களையும் முன்னணி ஹீரோயின்களாக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கார்த்திகாவும், துளசியும் ராசியல்லாத நாயகிகளின் பட்டியலில் இணைந்து விட்துதான் மிச்சம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions