படப்பிடிப்பில் காயமடைந்த ராய் லட்சுமி!

Bookmark and Share

படப்பிடிப்பில் காயமடைந்த ராய் லட்சுமி!

ராய்லட்சுமி தற்போது ‘சவுகார்பேட்டை’ படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராய்லட்சுமி பேய் வேடத்தில் நடிக்கிறார். 

ஸ்ரீகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மந்திரவாதியாகவும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்தில் விவேக், அப்புக்குட்டி, சரவணன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னைக்கு அருகில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டைக்காட்சியில் ராய் லட்சுமி, டூப் போடாமல் நடித்துள்ளார். ஒரு பேய் பறந்து பறந்து சண்டை போடும் காட்சி என்பதால், இதில், ராய் லட்சுமியின் இடுப்பில் ரோப் கயிறு கட்டி, கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக ராய் லட்சுமிக்கு கையில் லேசாக அடிபட்டது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. 

இதுகுறித்து ராய் லட்சுமி கூறும்போது, படப்பிடிப்பின் போது எனது கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அடிபடாமல் ஒரு சண்டைக்காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions