ஜெயராமுடன் முதன்முறையாக ஜோடிசேர்ந்தார் ராய்லட்சுமி..!

Bookmark and Share

ஜெயராமுடன் முதன்முறையாக ஜோடிசேர்ந்தார் ராய்லட்சுமி..!

ராய்லட்சுமி (லட்சுமிராய் தாங்க) நடித்த மலையாளப்படங்களை பார்த்திருக்கிறீர்களா..? முதன்முதலாக மலையாளத்தில் அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த 'ராக் அண்ட் ரோல்' படத்தை எப்படியாவது ஒருமுறை பார்த்து விடுங்கள்..

அவ்வளவு ஹோம்லி லுக்கில் உங்களை ஆச்சர்யப்படுத்துவார் ராய்லட்சுமி. தொடர்ந்து மம்முட்டியுடன் நடித்த அண்ணன் தம்பி, பருந்து, ராஜாதிராஜா உட்பட அவர் நடித்த மற்ற படங்களும் ராய் லட்சுமியை குடும்ப குத்து விளக்காகவே காட்டின.

கடந்தவருடம் அவர் பங்கிற்கு மலையாளத்தில் அவர் நடித்த 'ராஜாதிராஜா' படம் வெளியானது. இந்த வருடத்துக்கான கோட்டாவை இப்போதுதான் ஆரம்பிக்க இருக்கிறார் ராய்லட்சுமி.. ஆம்..

முதன்முறையாக  ஜெயராமுக்கு ஜோடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் சந்தோஷமாயி கோபியேட்டா... இந்தப்படத்தை இயக்கவிருப்பது போபன் சாமுவேல்.

சர்ச்சைக்குரிய 'ரோமன்ஸ்' படத்தை இயக்கிய அதே சாமுவேல்தான். தினேஷ் பள்ளத்து என்பவர் படத்திற்கு கதை எழுத, முக்கியமான பல காட்சிகளை ஆஸ்திரேலியா, மெல்போர்ன் ஆகிய இடங்களில் படம்பிடிக்க இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions