செப்டம்பர் மாதம் பயமுறுத்த வரும் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி

Bookmark and Share

செப்டம்பர் மாதம் பயமுறுத்த வரும் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி

தற்போது ரசிகர்களிடையே பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 2’, ‘டிமான்ட்டி காலனி’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஸ்ரீகாந்த்- ராய்லட்சுமி ஜோடியில் உருவாகி வரும் படம் ‘சவுகார்பேட்டை’.

இப்படத்தை மைனா, சாட்டை, மொசக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘பேகம் பேட்டா’ என்ற பெயரிலும் இந்தியில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.

ஜான்பீட்டர் இசையமைக்கும் இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இவர் படத்தை பற்றி கூறும்போது, ‘‘இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும். பேய் கதைதான், ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும்’’ என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions