ராய்லட்சுமியை வீழ்த்திய ஹன்சிகா!

Bookmark and Share

ராய்லட்சுமியை வீழ்த்திய ஹன்சிகா!

வாலு, ரோமியோ ஜூலியட், புலி என ஹன்சிகாவின் நடிப்பில் மூன்று படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில் வாலு படத்தில் அவர் மட்டுமே நாயகி என்றபோதும், ரோமியோ ஜூலியட்டில் பூனம் பாஜ்வாவுடனும், புலியில் ஸ்ருதிஹாசனுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்து அரண்மனை-2, இதயம் முரளி படங்களில் நடிக்கும் ஹன்சிகாவுக்கு, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம்-3 படத்திலும் நடிக்கும் ஆர்வம் ஏற்பட, அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் ஸ்ருதிஹாசன் அதற்கு முன்பே கமிட்டாகி விட்டதால் ஹன்சிகாவின் முயற்சி ஒர்க்அவுட்டாகவில்லை.

அதனால் இப்போது அரண்மனை-2 படத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார் ஹன்சிகா.

இதே படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க, தற்போது ஹன்சிகா கமிட்டாகியிருக்கும் பேய் வேடத்தில் நடிக்க லட்சுமிராய் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அரண்மனை படத்தில் ஹன்சிகாவே பேய் வேடத்தில் நடித்திருந்ததால் அவருக்கே முன்னுரிமை கொடுத்து விட்டாராம் சுந்தர்.சி.,

ஆக, சிங்கம்-3 வாய்ப்பு கிடைக்கவில்லை என்றபோதும், அரண்மனை-2 வாய்ப்பு கைகூடி விட்டதால் உற்சாகமாகவே காணப்படுகிறார் ஹன்சிகா.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions