படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமிக்கு காயம்

Bookmark and Share

படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமிக்கு காயம்

தமிழில் ‘மங்காத்தா’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘சவுகார்பேட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

தற்போது 'சவுகார்பேட்டை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சண்டைக் காட்சியில் லட்சுமிராயின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காயத்தால் ராய் லட்சுமி தற்போது அவதிப்பட்டு வருகிறாராம். இதனால், படப்பிடிப்புக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராய் லட்சுமி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா’ படத்திலும் ராய் லட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions