ஹோட்டலில் அமானுஷ்ய சம்பவத்திற்கு பயந்த நடிகை!

Bookmark and Share

ஹோட்டலில் அமானுஷ்ய சம்பவத்திற்கு பயந்த நடிகை!

நடிகை ராய் லட்சுமி பேய் படங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் முதலில் பேய் படமான காஞ்சனாவை தொடர்ந்து அரண்மனை படத்திலும் நடித்தார். இருபடமும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

தற்போது சவுகார்பேட்டை என்ற பேய்படத்தில் நடிக்கிறார். இதில் முதல் தடவையாக பேயாகவே வருகிறார். இது குறித்து கேட்டபோது.. ‘சவுகார்பேட்டை’ என்ற பேய் படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்  இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதில் கிராமத்து பெண் வேடம் ஆனாலும் வெவ்வேறு பரிமாணங்களில் வருகிறேன். அதில் ஒன்று பேய் வேடம்.

இந்த படம் எனக்கு பெரிய சவாலாக அமைந்தது. கஷ்டப்பட்டு நடித்தேன். பேய் படங்களில் நடித்தாலும் எனக்கு பேய் நம்பிக்கை கிடையாது. கடவுளை மட்டுமே நம்புகிறேன்.

ஆனாலும் சில அமானுஷ்ய சம்பவங்களை கண்டு நான் பயந்து இருக்கிறேன்.  அண்மையில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பத்தாவது மாடியில் தங்கி இருந்தேன். இரவு நேரத்தில் ஜன்னலுக்கு வெளியே பளிச் பளிச் என வெளிச்சம் தெரிந்தது.

அப்போது மழை இல்லை மின்கோளாறும் ஏற்படவில்லை. ஆனால் ஜன்னலில் ஓங்கி அடிக்கும் சத்தமும் கேட்டது.  வெளிச்சமும் வந்து கொண்டே இருந்தது. இதனால் ரொம்ப பயந்து போய்  உடனடியாக போனில் ஓட்டல் காவலரை அழைத்தேன்.

அவர்களிடம் விவரம் சொன்னேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் என் அறைக்கு வெளியே இரண்டு பாதுகாவலர்களை நிறுத்தி வைப்பதாக சொன்னார்கள். அன்று ரொம்பவும் பயந்து போனேன்  இவ்வாறு கூறினார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions