பேய் வேடங்களுக்காக வரிந்து கட்டும் ராய்லட்சுமி-டாப்சி!

Bookmark and Share

பேய் வேடங்களுக்காக வரிந்து கட்டும் ராய்லட்சுமி-டாப்சி!

காஞ்சனா-2 படத்துக்கு முன்புவரை அடங்கிக்கிடந்த டாப்சியின் மார்க்கெட் இப்போது சூடுபிடித்திருக்கிறது. அதிரடி பேயாக அவர் நடித்திருந்தாலும் அவரை அழகிய பேய் என்று கோடம்பாக்கம் கொண்டாடி வருகிறது.  

அதோடு, சிலர் பேய் வேடங்களில் நடிக்கவும் அவரை புக் பண்ணி வருகின்றனர். இதனால் ஹாரர் படங்களை மொத்த குத்தகை எடுத்துவிடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறார் டாப்சி.

இந்த நிலையில், அரண்மனையைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார் பேட்டை படத்தில் மாயா என்றொரு பேய் வேடத்தில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இதுவரை தமிழ்ப்படங்களில் வெளியான பேய் வேடங்களை விட இந்த படத்தில் அதிரடியான பேயாக நடிக்கிறாராம் ராய்லட்சுமி.

அதோடு இனிமேல் கவர்ச்சி ரூட்டை மாற்றி இதுபோன்று அதிரடியான பர்பார்மென்ஸ் ரோல்களில் கவனத்தை திருப்ப திட்டமிட்டுள்ள ராய்லட்சுமி, யாராவது இயக்குனர்கள் பேய் படம் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டால், சவுகார்பேட்டையில் தான் பேயாக நடித்துள்ள போட்டோக்களை அனுப்பி வைத்து, பேய் வேடத்தில் நடிக்க எனக்கே சான்ஸ் தர வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆக, பேய் வேடங்களை கைப்பற்ற மேற்படி நடிகைகளுக்கிடையே திரைக்குப் பின்னால் தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions