ராம் இயக்கத்தில் மம்முட்டி!

Bookmark and Share

ராம் இயக்கத்தில் மம்முட்டி!

மலையாளத்தில் பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதும் வழக்கம். ஆனால், அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படமான வந்தே மாதரம் வெளிவந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. 

அந்தப் படம் நீண்ட கால தயாரிப்பில் இருந்து வெளிவந்ததால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. லிங்குசாமி இயக்கிய முதல் படமான ஆனந்தம் படம்தான் மம்முட்டி தமிழில் கடைசியாக நடித்து வெற்றி பெற்ற படம். 

மம்முட்டிக்கு தமிழில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் அவர் நடித்து நேரடியாக வெளிவந்த மலையாளப் படங்களும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடின. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். 

தரமணி படத்திற்குப் பிறகு ராம் இயக்க உள்ள புதிய படத்தில் மம்முட்டிதான் கதாநாயகன். ஆன்ட்ரியா, அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions