விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா

Bookmark and Share

விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.

அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.

ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என டுவிட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் இணைத்துள்ளார். ராஷ்மிகா அந்த டுவீட்டுக்கு கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions