நடிகை ராதா மீது 2 பெண்கள் அடுத்தடுத்து புகார்கள் கொடுத்து மோதல்!

Bookmark and Share

நடிகை ராதா மீது 2 பெண்கள் அடுத்தடுத்து புகார்கள் கொடுத்து மோதல்!

‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் கதாநாயகி நடிகை ராதா சம்பந்தமான செய்திகள் கடந்த சில நாட்களாக பரபரப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது திடுக்கிடும் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது, உமாதேவி துணை கமிஷனர் சரவணனிடம் மீண்டும் இன்னொரு புகார் மனுவை கொடுத்தார். நடிகை ராதா செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனுக்களுக்கு நடிகை ராதா எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தார். அவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தங்கி இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த நடிகை ராதா, புதிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

தன்னிடம் ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக, பேட்டி கொடுத்த அவர், ரவுடி செல்போனில் மிரட்டி பேசிய பேச்சு பதிவான ஆடியோ கேசட்டையும் வெளியிட்டார்.

நடிகை ராதா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன் மீது புகார் கொடுத்த உமாதேவி மீதும், செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி வைரம் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

உமாதேவியின் கணவர் முனிவேலு, எனக்கு சிறு வயது முதல் பழக்கமானவர். அந்த வகையில் நட்பு ரீதியாக அவரிடம் பேசி, பழகி வந்தேன். இதை தவறாக எடுத்துக்கொண்டு முனிவேலை நான் அபகரித்து வைத்துக்கொண்டதாக, முனிவேலின் மனைவி உமா என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

முனிவேலை அபகரித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் முகேஷ் அம்பானி அல்ல. அவரை நான் காதலிக்கும் அளவுக்கு, பெரிய மன்மதனும் அல்ல. முனிவேலு நேற்று கூட அவரது மனைவியுடன் ஒன்றாக வேளாங்கண்ணி சென்று வந்துள்ளார். முனிவேலு, தனது மனைவி சைக்கோ மனப்பான்மை கொண்டவள், எதற்கும் சந்தேகப்படுவாள் என்று என்னிடம் சொல்லி வருத்தப்படுவார். அந்த வகையில்தான், உமா என்மீது சந்தேகப்பட்டு தவறான புகாரை கொடுத்துள்ளார்.

என் மீது புகார் கொடுக்க, உமாவை தூண்டிவிட்டவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். அந்த தொழில் அதிபருடன் நான் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவர் மீது நான் ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். பின்னர் அவரோடு சமாதானமாகி, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.

அந்த தொழில் அதிபர் தற்போது 2-வது திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவரை திருமணம் செய்யவிடாமல் நான் தடுத்து வருகிறேன். அதனால் அந்த தொழில் அதிபர்தான், எனக்கு எதிராக உமாவை தூண்டிவிட்டு, புகார் கொடுக்க வைத்துள்ளார்.

அந்த தொழில் அதிபர் தூண்டுதலின் பேரில்தான், ரவுடி வைரம் என்பவர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நடிகை ராதா தெரிவித்தார்.

பேட்டி கொடுத்துவிட்டு நடிகை ராதா சென்ற சற்று நேரத்தில், செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக ராதா சொன்ன ரவுடி வைரத்தின் மனைவி லீனா (வயது 38) என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.

அவர் நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதிலடி புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் லீனா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் குன்றத்தூரில், 2 குழந்தைகளுடன் வசிக்கிறேன். எனது கணவரை ரவுடியாக சித்திரித்து, குன்றத்தூர் போலீசார் பொய் வழக்கு போட்டு, சிறையில் தள்ளிவிட்டனர். எனது கணவர் கடந்த 1½ மாதமாக புழல் மத்திய சிறையில் இருக்கிறார். என்னுடன் கூட அவர் செல்போனில் பேச முடியாது.

இந்த நிலையில், நடிகை ராதா, எனது கணவர் செல்போனில் பேசி, அவரை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார். நடிகை ராதாவை செல்போனில் பேசி மிரட்டியதாக வெளியிட்ட தகவலை நானும் கேட்டேன். அது எனது கணவரின் குரல் அல்ல. எனது கணவரின் பெயரை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் செல்போனில் பேசி நடிகை ராதாவை மிரட்டி உள்ளார். அது யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தயவு செய்து எனது கணவரை, நடிகை ராதா அவரது பிரச்சினையில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு லீனா தெரிவித்தார்.

லீனா பேட்டி கொடுத்துவிட்டு வெளியில் சென்ற சிறிது நேரத்தில், நடிகை ராதா மீது முதலில் புகார் கொடுத்த, உமாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவர் புதிய புகார் மனு ஒன்றை, நடிகை ராதா மீது பதிவு செய்தார்.

நடிகை ராதா, தன்னை சைக்கோ பெண்மணி என்றும், கந்து வட்டி தொழில் செய்பவள் என்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி கொடுத்தார். அவரால் தனக்கும், தனது 2 மகள்களுக்கும் ஆபத்து இருப்பதாகவும் புதிய புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும் தனது கணவருடன் நடிகை ராதா செல்போனில் பேசிய பேச்சு பதிவான ஆடியோ கேசட் ஒன்றையும் உமா வெளியிட்டார். மேலும் ராதாவின் செல்போன் பேச்சு உரையாடல், வாட்ஸ்-அப்பிலும் வெளியானது. அந்த உரையாடலில் நடிகை ராதா, உமாதேவியின் கணவரோடு பேசுவது பதிவாகி உள்ளது.

நடிகை ராதாவின் அந்த பேச்சு, உமாதேவியின் கணவரோடு நடிகை ராதா தொடர்பு வைத்திருப்பதை உறுதிபடுத்துவதுபோல உள்ளது. உமாதேவியின் கணவர் ராதாவுடன் மிகவும் ஆபாசமாக படுக்கை அறை அந்தரங்கம் பற்றி பேசுவது போன்ற உரையாடலும் அதில் உள்ளது.

உமாதேவி கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்கவேண்டும் என்று உமாதேவியின் கணவரை நடிகை ராதா வற்புறுத்தும் உரையாடல் அதில் வருகிறது. இந்த செல்போன் பேச்சு உரையாடல் விவகாரம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த மோதல் விவகாரத்தில் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நடிகை ராதாவின் செல்போன் பேச்சு உரையாடல் பற்றி அவர் என்ன பதிலடி கொடுக்கப்போகிறார்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Post your comment

Related News
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions