சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள்; அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்: ராதாரவி

Bookmark and Share

சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள்; அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்: ராதாரவி

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  'என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, ஆர்கேவை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இவர் ஒரு நல்ல தொழிலாளி, நல்ல நிர்வாகியும் கூட.

இந்த விழாவில் ஒரு இயக்குநர் உங்களது இந்த தலைமுடி கெட்அப்-ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. என் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கிறேன் என்றார். மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை.

நான் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாதவன். எனக்கு நடிப்பது தவிர தெரியாது. கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரிந்தவன். ஆர்கே தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பார்த்து எங்கே இப்படிப்பட்ட கதையைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியப்படுவேன்.

‘என் வழி தனி வழி' படத்தில் அவர் முதல் போட்ட தயாரிப்பாளராக இருந்தாலும் டைரக்டர் சொன்னபடிதான் கேட்டார். அவரிடம் ஆர்கே எவ்வளவு திட்டு வாங்கினார் தெரியுமா? ஒரு உதவியாளர்போல வேலை பார்த்தார்.

சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யவேண்டும். அடுத்தவன் வேலையைச் செய்யக் கூடாது. அதுபோல டைரக்டர் வேலையை அவர் செய்கிறார் என்று பொறுமையாக இருந்தார் ஆர்கே. அவரிடம் தான் முதலாளி என்கிற திமிர் இல்லை. எதிலும் தலையிடவில்லை. சினிமாமீது அவருக்கு அவ்வளவு காதல். அது அவரை இன்னும் உயர்த்தும்.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

இவ்விழாவில் நாயகன் ஆர்கே, இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், கலை இயக்குநர்கள் போபன், அங்கமுத்து சண்முகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் மதன்பாப், தலைவாசல் விஜய், 'வழக்கு எண்' முத்துராமன், ரமேஷ் கண்ணா,  தயாரிப்பாளர் ஞானவேல், இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, செந்தில்நாதன், பாடலாசிரியர் இளைய கம்பன், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions