நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இச்சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்கள்.
இரு தரப்பினரும் தமிழகம் முழுவதும் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விஷால் சமீபத்தில் புதுக்கோட்டை சென்று நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். ராதாரவி வருகிற 15–ந் தேதி திருச்சி சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
அவருடன் கே.என்.காளை, டைரக்டர் கே.ஆர்.செல்வராஜ், நடிகைள் பசி சத்யா, குயிலி, எஸ்.எஸ்.ஆர். கண்ணன் போன்றோரும் திருச்சி செல்கிறார்கள். நாடக நடிகர்களை தனித்தனியாக சந்தித்து ஓட்டு கேட்கின்றனர்.
இதற்காக அன்றைய தினம் திருச்சியில் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் நாடக நடிகர்கள் தவறாது பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions