சரத்குமார் அணியினர் என்ன கவுரவர்களா? ராதாரவி பேச்சு

Bookmark and Share

சரத்குமார் அணியினர் என்ன கவுரவர்களா? ராதாரவி பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் என இரு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.

இதில் சரத்குமார் அணியை சேர்ந்த நடிகர் ராதாரவி மற்றும் குழுவினர் கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கரூர் வந்தனர். கரூரை அடுத்த தாந்தோணிமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நடிகர் சங்க தேர்தல் என்றால் பொதுவாக ஒருவரையொருவர் கைகுலுக்கி கொண்டு அவரவருக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு அளித்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் இந்த தேர்தலில் பாண்டவர் அணி என்று விஷால் தங்கள் அணிக்கு பெயர் வைத்து போர்க்களம் போல் சித்தரித்து உள்ளார்.

அப்படியானால் நாங்கள் (சரத்குமார் அணியினர்) என்ன கவுரவர்களா?. விஷால் சரித்திரம் தெரியாமல் பேசுகிறார். நாடக நடிகர்களுக்கு ரூ.500 பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று உங்களை(நாடக நடிகர்களை) தரக்குறைவாக விஷால் எடை போட்டு உள்ளார்.

அதற்கு நீங்கள் இடம் கொடுக்க கூடாது. குழந்தை பருவத்திலேயே நாடக மேடையை பார்த்தவன் நான். நாடக நடிகர்களுக்கு சரத்குமார் அணி என்றும் ஆதரவாக இருக்கும். நடிகர் சங்க தேர்தலில் ஜாதி மற்றும் அரசியலை புகுத்தி விட்டனர்.

இப்படி இருக்கும் சூழலில் ஓட்டு போட நீங்கள் யாரும் சென்னைக்கு வரவேண்டாம். இங்கிருந்தே தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்யுங்கள். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி விழாவிற்கு உங்களை சென்னைக்கு நானே அழைத்து செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நடிகர்கள் பவன், விஷ்ணுபிரியன், கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்க நிர்வாகிகள் என்.எஸ்.அலிபாபா, கே.எம்.புரட்சிகண்ணன், ஜெயபால், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் மொத்தம் 37 ஓட்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு

பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அப்படி முறைகேடு நடந்து இருந்தால் அவர்கள் நிரூபிக்க வேண்டியதுதானே? அதற்கான ஆதாரம் அவர்களிடம் இல்லை. நடிகர் விஷால், நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக கூறினார். நாடக நடிகர்களுக்கு உடனே நிலம் கொடுத்தால் நான் போட்டியில் இருந்து விலகி கொள்கிறேன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாடக நடிகர்கள் இல்லாத சங்கமாக மாற்ற விஷால் அணியினர் முயற்சி செய்கின்றனர். இதை புரிந்து கொண்டு நாடக நடிகர்கள் வாக்களித்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 1952-ல் நாடக நடிகர்கள் சங்கம் என்று எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதன் பிறகுதான் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மாற்றினார்.

இந்த விவரம் எல்லாம் விஷாலுக்கு தெரியாது. சங்க சம்பளத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று கூறினார். கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment

Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions