நடிகர் சங்க தேர்தல் : ஐகோர்ட் உத்தரவு

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, அச்சங்கங்கள், இம்மாதம் 28ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சங்க பதிவாளர்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், இம்மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் காண்பதாக இருந்தன. இந்நிலையில், 15ம் தேதி புதன்கிழமை.

அதற்கு பதிலாக, அந்த வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையில் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில், நடிகர் நாசர், விஷால், கார்த்தி தரப்பினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கவுல், சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்க தேர்தல் குறித்த விதிமுறைகளை, பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

நடிகர் சங்கத்தில், 700 உறுப்பினர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விஷால் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. தனிநீதிபதி தீர்ப்பளித்த, இடைக்காலத்தடை குறித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions