மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி

Bookmark and Share

மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி

அருள்நிதி எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில் இவர் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிருந்தாவனம், இப்படத்தில் நடிகர் விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இதில் அருள்நிதி காது கேளாதவராகவும், வாய் பேச முடியாதவராகவும் நடிக்கின்றாராம், கண்டிப்பாக அருள்நிதி திரைப்பயணத்தில் பிருந்தாவனம் முக்கிய படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த மொழி படத்தில் கூட ஜோதிகா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions