நடிகர் சங்க தேர்தல் : ராதாரவிக்கு ஐகோர்ட் உத்தரவு

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் : ராதாரவிக்கு ஐகோர்ட் உத்தரவு

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷால் தரப்பில் தாக்கல் செய்த மனு தொடர்பாக, ராதாரவி, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், அடுத்தமாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. சரத்குமார் தலைமையிலான அணி உள்ளிட்ட அணிகள், இந்த தேர்தலில் களம் காண உள்ளன.

சரத்குமார் அணிக்கு கடும்போட்டியாக, நாசர் தலைமையிலான அணி உருவாகியுள்ளது. சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து, நடிகர் விஷால் களமிறங்கப்போவதாக வந்துள்ள தகவலால், தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதம் 15ம் தேதி புதன்கிழமை என்பதால், அன்றைய தினம் நடைபெற உள்ள ஓட்டுப்பதிவை, அவ்வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாசர், விஷால், கார்த்தி சார்பில், சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தேர்தலை கண்காணிக்கும் பணியில், 2 வக்கீல்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக, நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடைபெறும் தினத்தை மாற்றியமைக்க கோரிய மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த மனு தொடர்பாக, நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி
ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு
இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions