நடிகர் சங்க தேர்தல் தேதி : ராதாரவி பதில் மனு தாக்கல்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் தேதி  : ராதாரவி பதில் மனு தாக்கல்

சென்னை : நடிகர் சங்க தேர்தல் தேதியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, கோர்ட்டில், பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணிக்கும், விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

ஜூலை 15ம் தேதி, வார வேலைநாளான புதன்கிழமையாக உள்ளதால், தேர்தலை, அவ்வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று விஷால், நாசர், கார்த்தி தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும், தேர்தலை, வக்கீல்கள் கண்காணிப்பதற்கு பதிலாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனு தொடர்பாக, இருவார காலஅளவிற்குள் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ராதாரவி, சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் உறுப்பினர்கள் முன்னிலையில் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்து, இந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரோ மூவர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக, தேதியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் தரப்பிலான மனுவிற்கு, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி
ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு
இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions