நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 15 ஆம் தேதி புதன்கிழமை என்பதால் நடிகர்கள் பலர் ஓட்டுப்போட வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் தேர்தலை தள்ளி வைக்க கோரி  நடிக்கர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ராதாரவி தனது பதில் மனுவில், 'நடிகர் சங்கத் தேர்தல் நடத்தும் தேதியை செயற்குழுதான் முடிவு செய்துள்ளது. செயற்குழு முடிவின்படி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிதில்லை.

3,500 உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே தேர்தல் தேதி, இடத்தை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சங்க தேர்தலை ஜூலை 15ஆம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நடிகர் சங்க தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions