நீக்கியவர்கள் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர் நடிகர் சங்கத்தில் ..

Bookmark and Share

நீக்கியவர்கள் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர் நடிகர் சங்கத்தில் ..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து, சென்னையில் எந்த இடத்தில் தேர்தலை நடத்தலாம் என்று அவர் ஆய்வு நடத்தி வருகிறார்.

இதற்கிடையில்,  ஓட்டுப்போட  நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் பட்டியல் சங்க பதிவாளரிடம்  ஒட்டுப்போட தகுதி உள்ளவர்களாக 3148 பேர் இடம் பெற்று உள்ளனர் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தில் இருந்து ஏற்கெனவே நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவையும்,  உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கவில்லை என்று , பூச்சி முருகன், ஆர்.எம்.சுந்தரம், பி.ஏ.காஜாமொய்தீன் ஆகியோரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். அவர்களும் தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த நான்கு பேரும் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கோர்ட்டின் இடைக்கால உத்தரவுப்படி இவர்கள் நடிகர் சங்க உறுப்பினர்களாக காட்டப்படுகின்றனர் என்று சங்கப்பதிவாளருக்கு நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்தை பதிவாளர் பரிசீலித்து வருகிறார். நடிகர் சங்க உறுப்பினர் இறுதி பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions