விளம்பர சர்ச்சை... டுவிட்டரில் ராதிகா விளக்கம்....!

Bookmark and Share

விளம்பர சர்ச்சை... டுவிட்டரில் ராதிகா  விளக்கம்....!

குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் மேகி நூடுல்ஸில், அதை சாப்பிடுபவர்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அளவுக்கதிகமாக கலந்திருப்பதால், மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்திருப்பது மட்டுமல்ல, அதன் விளம்பரப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை மாதுரி தீட்ஷித் ஆகியோருக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது உத்தர பிரதேச அரசு.

மேகி நூடுல்ஸை சாப்பிடும்படி சிபாரிசு செய்யும் முன் அதை நீங்கள் சாப்பிட்டு பார்த்தீர்களா? அதில் நச்சுப்பொருள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? எக்றி ரீதியில் பல கேள்விகளையும் எழுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.  இந்த நடவடிக்கையினால்  விளம்பரப்படங்களில் நடிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபக்கமிருக்க, நடிகை ராதிகாவுக்கும் இதேபோன்றதொரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. சென்னை அம்ரிதா என்ற பிரபல கல்வி நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றும் நடிகை ராதிகா, நான் சென்னை அமிர்தாவுல இருக்கேனா? இல்லே... துபாய் 7 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேனா? என்று சென்னை அம்ரிதா கல்விநிறுவனத்தைப் பற்றி  பெருமையாகப் பேசுகிறார்.

இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன் அந்த கல்லூரியில் ஒரு மாணவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு சென்னை அமிர்தாவின் விளம்பரத் தூதுவரான ராதிகாவும் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

இதை அறிந்த ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் தன் தரப்பை தெளிவுபடுத்தி இருக்கிறார். நடிகையாக அவர்களின் விளம்பரப்படத்தில் நடித்தேனே தவிர நான் அந்த நிறுவனத்தில் விளம்பர தூதுவர் அல்ல.

அந்த கல்விநிறுவனத்தில் சேர்ப்பதற்கு முன் பெற்றோர்கள் விசாரித்து செயல்படவும். அந்த நிறுவனம் பற்றி தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளதால் இனி சென்னை அமிர்தா விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன்! இவ்வாறு ராதிகா கூறியுள்ளார்.

இதேப்போன்று ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு அடுத்தப்படியாக சிக்கல்கள் உருவாகயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையர் கலக்கத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions