இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்க சென்னையில் குறும்பட விழா: ராதிகா பேட்டி

Bookmark and Share

இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்க சென்னையில் குறும்பட விழா: ராதிகா பேட்டி

‘‘இளைஞர்கள் திறமையை ஊக்குவிக்க சென்னையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது’’ என்று நடிகை ராதிகா கூறினார்.

நடிகை ராதிகா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘சினிமாவில் இருந்து டெலிவிஷனில் நடிக்க சென்றேன். டி.வி. தொடர்கள் தயாரித்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது குறும்பட விழா நடத்தி இளைஞர்கள் படைப்பாற்றலை ஊக்குவிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

இளைஞர்கள் விதம்விதமாக நிறைய கதைகள் வைத்து இருக்கிறார்கள். பிரபலமான டைரக்டர்களிடம் பணியாற்றாமலேயே அற்புதமான குறும்படங்கள் இயக்கி யூடியூப்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு சினிமாவில் டைரக்டராக அறிமுகமாவதே குறிக்கோளாக இருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் கனவை நனவாக்கவே ராடான் நிறுவன துணைத்தலைவர் ரேயான் ஏற்பாட்டில் குறும்பட விழா நடத்தப்படுகிறது.

இந்த குறும்பட விழாவுக்கு இந்திய மற்றும் சர்வதேச அளவில் 200 குறும்பட இயக்குனர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி இருக்கிறார்கள். இதில் முதல்கட்டமாக 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் இருந்து நடிகர் சரத்குமார், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறந்த 10 படங்களை தேர்வு செய்தனர்.

இறுதியாக இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் ஆகியோர், பாதை, முற்பகல் செய்யாவிடில், ஹைக்கூ, கொக்கரிக்கும் காதல், மனம், நிஷிதி, ஓடம் ஆகிய 7 சிறந்த படங்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்த 7 குறும்படங்களும் அடுத்த மாதம்(மார்ச்) 9-ந்தேதி சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.’’
இவ்வாறு ராதிகா கூறினார்.

நடிகர் சரத்குமார் கூறும்போது, ‘‘இளைஞர்கள் குறும்படங்கள் இயக்கி பேஸ்புக், யூடியூப்களில் வெளியிடுகின்றனர். அவர்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்த குறும்பட விழா பாதை அமைத்துக்கொடுக்கும்.’’ என்றார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions