சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

Bookmark and Share

சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

பாலிவுட் படங்களில் நடிப்பது தான் மிகவும் சவுகரியமாக இருப்பதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கபாலி படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே உலா படத்தில் நடித்துள்ளார். அவர் பாலிவுட் படங்களில் தான் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது,

நான் தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ரஜினிகாந்த் சாருடன் நடிப்பது வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பு. நான் அவரின் தீவிர ரசிகை.

ரஜினிகாந்திடம் இருந்து அடக்கம், கடின உழைப்பு உள்ளிட்ட பலவற்றை கற்றுக் கொண்டேன். அவர் மிகப் பெரிய ஸ்டார். இருப்பினும் அது போன்று இல்லாமல் சாதாரணமாக பழகுவார்.

கபாலி 2 வருவதாக கூறுகிறார்கள். அப்படியா? எனக்கு எதுவும் இதுவரை தெரியவில்லையே. நான் தற்போது பேட்மேன் என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தமிழ் படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. அதனால் அது குறித்து பேச முடியாது. பாலிவுட்டில் எனக்கு மொழி தெரியும். அதனால் இங்கு தான் எனக்கு வசதியாக உள்ளது என்றார் ராதிகா.

தென்னிந்திய இயக்குனர்கள் பற்றி ராதிகா ஆப்தே விமர்சித்ததை அடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் பாலிவுட்டில் நடிப்பது வசதியாக உள்ளது என ராதிகா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிகினி உடையில் கொண்டாட்டத்தில் ராதிகா ஆப்தே
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி
ஐடி ரெய்டுக்குள்ளான "சித்தி" அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்... "நாட்டாமை"யிடம் விசாரணை
மீண்டும் வெளியான ராதிகா ஆப்தேவின் சர்ச்சை புகைப்படம், வைரல் போட்டோ உள்ளே
தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை: ராதிகா ஆப்தே புகார்
தமிழ் இயக்குனர்கள் மீது ராதிகா அப்தே பரபரப்பு குற்றச்சாட்டு
அதாண்டா ராதிகா! வியக்கும் சினிமாவுலகம்!
நடிகர்களின் மேக்கப்புக்கு 6 கோடி செலவா? ராதிகா கோபத்துடன் கேள்வி!
ராதிகா ஆப்தேவின் இன்னொரு ஆபாச புகைப்படம் லீக் – புகைப்படம் உள்ளே!
இதெல்லாம் பொதுக்குழுவே கிடையாது – ராதிகா சரத்குமார் ஆவேசம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions