“ஆணாதிக்கம் பிடித்த டோலிவுட்” - கொதிக்கும் ராதிகா ஆப்தே..!

Bookmark and Share

“ஆணாதிக்கம் பிடித்த டோலிவுட்” - கொதிக்கும் ராதிகா ஆப்தே..!

தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா படம் இவரது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் நன்கு பதிய வைத்தது.

தற்போது இந்தியில் கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள பிஸியான ஹீரோயின் தான் ராதிகா ஆப்தே. மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து சமீபத்தில் வெளியான ஹரம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  

ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் மூலம் தெலுங்கில் நுழைந்த ராதிகா ஆப்தே, அடுத்து நடித்தது பாலகிருஷ்ணாவின் லெஜன்ட். மீண்டும் தெலுங்கில் நடித்துக்கொண்டிருப்பதும் பாலகிருஷ்ணாவின் லயன் படத்தின் மூலமாகத்தான்.

ஆனால் தெலுங்கு திரையுலகம் நடிகைகளுக்கு மரியாதையை தரவில்லை என கொந்தளிக்கிறார் ராதிகா..

“தெலுங்கு சினிமா ஆணாதிக்கம் கொண்டவர்களின் பிடியில் சிக்கியுள்ளது. என்னால் இங்கே நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என தோன்றவில்லை” என கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

ஆணாதிக்கம் பிடித்தவர்கள் என்று, இவருக்கு இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்த பாலகிருஷ்ணாவை சொல்கிறாரா..? இல்லை வாய்ப்பு தராதவர்களை, தன்னை டம்மியாக்க நினைப்பவர்களை சொல்கிறாரா என்றுதான் தெரியவில்லை.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions