இணைய தளங்களில் என் நிர்வாண வீடியோவை பரப்புவதா?: ராதிகா ஆப்தே ஆவேசம்

Bookmark and Share

இணைய தளங்களில் என் நிர்வாண வீடியோவை பரப்புவதா?: ராதிகா ஆப்தே ஆவேசம்

தமிழில் 'தோனி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஹாலிவுட் படமொன்றில் இவர் துணிச்சலாக நிர்வாணமாக நடித்துள்ளார். இக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஒரு ஆண் முன்பு தனது ஆடையை கழற்றுவது போல் இக்காட்சியை எடுத்தனர். இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மட்டுமே இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு இதில் அவர் நடித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நடித்த காட்சிகளை ரகசியமாக வைத்து இருந்தனர்.

ஆனால் திடீரென ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி இணைய தளங்களில் பரவியது. யாரோ திருட்டுத்தனமாக இதைவெளியிட்டு விட்டனர். இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சியானார். வீடியோவை கசிய விட்டவர்களை கண்டுபிடிக்கும்படி போலீசில் படத்தின் டைரக்டர் புகார் அளித்துள்ளார். நிர்வாண காட்சியில் ராதிகா ஆப்தே நடித்ததற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நான் நடித்த நிர்வாண வீடியோவை யாரோ இணைய தளங்களில் வெளியிட்டு விட்டனர். நிறைய பேர் வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

அவர்களை பற்றி சிந்திக்கவோ நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்யவோ எனக்கு நேரம் இல்லை. நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இவர்களுக்காக என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

என்னையோ எனது குடும்பத்தினரையோ இந்த செயல் சிறிதும் பாதிக்க வில்லை. எனவே இதுபற்றி எனக்கு கவலை இல்லை.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions