முதல் நாள் ரஜினியுடன் நடித்ததை மறக்க முடியாது: ராதிகா ஆப்தே

Bookmark and Share

முதல் நாள் ரஜினியுடன் நடித்ததை மறக்க முடியாது: ராதிகா ஆப்தே

ரஜினியின் 'கபாலி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. 2–ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.

ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இவர்கள் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டபோது ரஜினியின் காலைத் தொட்டு வணங்கி, அவரிடம் ஆசி பெற்றார்.

பின்னர் அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கியதும் ராதிகா ஆப்தே பதட்டமானார். நடிப்பதற்கு திணறினார். தன்னுடன் நடிப்பதால் ராதிகா ஆப்தே பதட்டம் அடைந்ததை புரிந்து கொண்ட ரஜினி, பின்னர் ராதிகா ஆப்தேவை அழைத்து அவருடன் சாதாரணமாக பேசினார்.

தனது படப்பிடிப்பு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். யதார்த்தமாக ரஜினி பேசியதையும், அவரது எளிமையையும் கண்ட ராதிகா ஆப்தே சகஜ நிலைக்கு வந்தார்.

அதன் பிறகு இயக்குனர் சொன்ன காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக நடித்தார். ரஜினியுடன் முதல் நாள் நடித்த அனுபவம் குறித்து கூறிய ராதிகாஆப்தே...

நான் ரஜினி சாருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தேன். நடிக்க வேண்டிய காட்சி என்ன என்பது பற்றி ஏற்கனவே எனக்கு குறிப்பு தந்து விட்டார்கள். வசனத்தையும் எழுதி அனுப்பி இருந்தார்கள். நடித்து ஒத்திகை பார்த்து தயாராக இருந்தேன்.

ஆனால் ரஜினி சாரை பார்த்ததும் பதட்டம் ஏற்பட்டதால் எல்லாமே தலைகீழாகி விட்டது. பின்னர் அவரது ஆலோசனைப்படி என்னை சரி செய்து கொண்டேன். முதல் நாள் படப்பிடிப்பையும், அவருடன் நடித்த போது ஏற்பட்ட உற்சாகத்தையும் அனுபவத்தையும் மறக்க முடியாது. 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions