‘வானவில் வாழ்க்கை’யில் கடைக்குட்டி நான்தான் : ராதிகா ஜார்ஜ்

Bookmark and Share

‘வானவில் வாழ்க்கை’யில்  கடைக்குட்டி நான்தான் : ராதிகா ஜார்ஜ்

ராதிகா ஜார்ஜ் சிறு வயது முதலே ட்ரம்ஸ் இசையில் ஆர்வமுடன் பயின்று வருகிறவர். லண்டன் ட்ரினிட்டி இசை கல்லூரியில் ட்ரம்மிங் இசை பயின்றுள்ள இவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.“ அடிப்படையில் நான் ஒரு ட்ரம்ஸ் இசைக்கலைஞர்.

கடந்த 13வருடங்களாக ட்ரம்ஸ், தபேலா, கஜான், தர்புகா, கிட்டார் மற்றும் கீ போர்டு பயின்று, வாசித்து வருகிறேன். இதற்கு முன்பு நடித்ததே இல்லை. இசை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என்று நினைத்துதான் ஜேம்ஸ் சார் ஸ்டுடியோவிற்கு நானும் எனது கல்லூரி நண்பர்களும் சென்றோம். அங்கு நடிக்க சொல்லிவிட்டார்கள்.” என்றார் என்ஜினியரிங் பயிலும் ராதிகா.

“இப்படத்தில் மிகவும் அமைதியான அனைவரையும் மதிக்கும் ஹரிணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இது எனது இயல்பான துருதுரு கதாப்பாத்திரத்திற்கு நேரெதிராய் அமைந்தது.

படத்திலேயே கடைக்குட்டி நான்தான், என்னை நடிக்க வைக்க அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒரு காட்சியில் கரப்பான்பூச்சியைப் பார்த்து அலற வேண்டும் என்னை சுற்றி அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டு நடித்தனர்.

பல டேக்குகளுக்கு சென்ற பிறகும் எனக்கு பயந்தது போல் நடிக்க வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஜேம்ஸ் சார் உண்மையான கரப்பான்பூச்சியை போட்டு என்னை பயமுறுத்தி அந்தக் காட்சியை படமாக்கினார்.

““ இசைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் என்பது  மிக பெருமையாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜேம்ஸ் வசந்தன் சார் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். ” என மகிழ்ச்சி பொங்க கூறினார் ராதிகா ஜார்ஜ்.  

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions