ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி

Bookmark and Share

ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் 2-வது படம் ஆஸ்திரேலியாவில் உருவாகிறது. இதில் ராதிகா,குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி நடிக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவில் வாழும் நான்கு நடுத்தர வயது பெண்களின் வாழ்க்கைபற்றிய கதை.

அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையும், சம்பவங்களையும் இந்த படத்தில் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

அங்குள்ள சாலையில் 4 பேரும் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதையும் ஆஸ்திரேலியாவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாயகிகள் 4 பேருடன் படக்குழுவினர் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளனர்.

இங்கு படப்பிடிப்பு முடித்த பிறகு, ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions