மலையாள பின்னனி பாடகி ராதிகா புற்றுநோயால் மரணம்!

Bookmark and Share

மலையாள பின்னனி பாடகி ராதிகா புற்றுநோயால் மரணம்!

பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகி. 1991–ம் ஆண்டு ‘ஒற்றையால் பட்டாளம்’ என்ற மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ராதிகா திலக் 70–க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் பாடியுள்ளார். ராதிகா திலக் கேரள மாநிலம் கொச்சி பிள்ளையா விளையை சேர்ந்தவர், வயது 45.

ராதிகா திலக் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

உடனே அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதிகா திலக் மரணமடைந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. 

ராதிகா திலக் மரணமடைந்த தகவல் கிடைத்ததும் பிரபல மலையாள பாடகர்கள் எம்.ஜி.ஸ்ரீகுமார், வேணுகோபால் உள்பட பாடகர்களும் மேலும் பல மலையாள திரையுலகினரும் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராதிகா திலக்கின் கணவர் கிருஷ்ணா தொழில் அதிபராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions