தமிழ் இயக்குனர்கள் மீது ராதிகா அப்தே பரபரப்பு குற்றச்சாட்டு

Bookmark and Share

தமிழ் இயக்குனர்கள் மீது ராதிகா அப்தே பரபரப்பு குற்றச்சாட்டு

கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ராதிகா அப்தே. அவர் அதற்கு முன் சில தமிழ் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் இயக்குனர்கள் யாரும் ஹீரோயின்களை மதிப்பதில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

"ஹீரோக்களுக்கு மட்டும் 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் கொடுப்பார்கள், ஆனால் ஹீரோயின்களுக்கு சாதாரண ஹோட்டலில் தான் தங்கவேண்டும்.

ஹீரோக்கள் எவ்வளவு லேட்டாக வந்தாலும் கேட்கமாட்டார்கள் ஆனால் ஹீரோயின்கள் ஒரு நிமிடம் கூட லேட்டாக வர கூடாது என்பார்கள்."

"நான் அனைவரையும் கூறவில்லை. கபாலி படத்தில் நடித்தபோது ரஞ்சித், ரஜினிகாந்த் என்னை மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள்.

ஆனால் மற்ற படங்களில் பணியாற்றியது கசப்பான அனுபவம்" என பேட்டியில் கூறியுள்ளார் அவர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions